தருப்பைப்புல் என்பது Desmostachya bipinnata என்ற அறிவியல் பெயர் கொண்ட புல்வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும். இதில் பல வகைகள் உண்டு. தருப்பைப் பொதுவாக ஆங்கிலத்தில் ஆல்பா புல் (Halfa Grass), Big cordgrass, மற்றும் உப்புக்கோரைப்புல் (Salt reed-grass) என அறியப்படுகிறது.[5] பண்டைய மனித உலக வரலாற்றில் அறியப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட இத்தாவரம் இந்தியாவில் "தாப்" (Daabh), தர்ப்பை (Dharbha), குசம் அல்லது குசா (Kusha) முதலிய பல பெயர்களால் வழங்கப்படுகிறது.[6]
தருப்பை வடகிழக்கு மற்றும் மேற்கு வெப்பமண்டலப் பகுதிகள், வடக்கு ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா லிபியா, மொரிடானியா(Mauritania), சோமாலியா, சூடான், மற்றும் துனிசியா) ஆகிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மித வெப்ப மண்டல மற்றும் வெப்பமண்டல நாடுகளான ஆசியா, ஆப்கானிஸ்தான், சீனா, இந்தியா, ஈரான், ஈராக், இஸ்ரேல், மியான்மார், நேபாளம், பாக்கிஸ்தான், சவுதி அரேபியா, தாய்லாந்து). ஆகிய இடங்களிலும் காணப்படுகிறது.[7]
நாட்டுப்புற மருத்துவத்தில் தருப்பையானது வயிற்றுக்கடுப்பு மற்றும் பெரும்போக்கு எனப்படும் மாதவிடாய் மிகைப்பு, மற்றும் டையூரிடிக் எனப் பல்வேறுநோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[8] மேலும் யுனானி மருத்துவத்திலும், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
வறண்ட பகுதிகளில், தருப்பை கால்நடைகளுக்குச் சிறந்த தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.[9]
ஆற்றோரங்களில் தானாகவே விளையும் தருப்பையானது, கோதுமைப் பயிர் விளை நிலங்களில் பொதுவாகக் களையாக வளர்கிறது.[10]
இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது.[11] ரிக் வேதத்தில்(Rig Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பைக் குறிப்பிடப்படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[12] பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.[13]
தருப்பையில் ஏழுவகை உண்டு.அவை,
என்பன. மேலும் நுனிப்பகுதி பருத்துக் காணப்படின் அது பெண்தருப்பை எனவும், அடிப்பகுதி பருத்திருப்பின் அது அலி தர்ப்பை எனவும், அடிமுதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது ஆண் தருப்பை எனவும் வழங்கப்படுகிறது.[14]
பெரும்பாணாற்றுப்படையில் கூரைகள் தருப்பையால் வேயப்பட்டிருந்தன எனக் குறிப்பிடப்படுகிறது.
தருப்பைப்புல் என்பது Desmostachya bipinnata என்ற அறிவியல் பெயர் கொண்ட புல்வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும். இதில் பல வகைகள் உண்டு. தருப்பைப் பொதுவாக ஆங்கிலத்தில் ஆல்பா புல் (Halfa Grass), Big cordgrass, மற்றும் உப்புக்கோரைப்புல் (Salt reed-grass) என அறியப்படுகிறது. பண்டைய மனித உலக வரலாற்றில் அறியப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட இத்தாவரம் இந்தியாவில் "தாப்" (Daabh), தர்ப்பை (Dharbha), குசம் அல்லது குசா (Kusha) முதலிய பல பெயர்களால் வழங்கப்படுகிறது.