dcsimg

பாறை தகைவிலான் ( Tamil )

provided by wikipedia emerging languages

பெயர்கள்

தமிழில் :பாறை தகைவிலான்

ஆங்கிலப்பெயர் :Dusky Crag-Martin

அறிவியல் பெயர் :Hirundo concolor [2]

உடலமைப்பு

13 செ.மீ. - புகைப் பழுப்பான இதன் வால் பிற தகைவிலான்களைப் போல நீண்டிராததாக சதுரமாக இருக்கும். மேல் உடம்பை விடமார்பும் வயிறும் பழுப்புக் குறைந்து மெல்லிதான கருப்புக் கோடுகளுடன் காணப்படும்.

காணப்படும் பகுதிகள் ,உணவு

மலைகளில் உயர்ந்து நிற்கும் செங்குத்தான பாறைகள், கோட்டைகள், பழங்காலக் கட்டிடங்கள், அணைக்கட்டுச் சுவர்கள் ஆகியவற்றில் இணையாகவோ சிறு குழுவாகவோ அலைந்து பறந்து, பறக்கும் வண்டுகளையும் சிறகுடைய பு+ச்சிகளையும் பிடித்துத் தின்னும். பறக்கும் போதும் சுவர்கள் மீது அமர்ந்து ஓய்வு கொள்ளும் போதும் சிட், சிட்,. என மென்குரலில் கத்தும். [3]

இனப்பெருக்கம்

கூடு கட்டச் சேற்று மண் கிடைக்கும் பருவத்தில் சேற்றைக் கொண்டு குகைகள், தொங்கும் பாறை இடுக்குகள், பால வளைவுகள் ஆகியவற்றில் கூடமைத்து 2 முதல் 4 முட்டைகள் இடும்.

 src=
பாறை தகைவிலான் குஞ்சுகள் புனே இந்தியா

இமயமலைச் சாரல்களைச் சார்ந்து இனப்பெருக்கம் செய்யும் பாறைத் தகைவிலான் Crag Martin H.rupertris குளிர்காலத்தில் நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளிளுக்கு வலசை வரக்காணலாம்.

படங்கள்

பாறை தகைவிலான்

மேற்கோள்கள்

  1. "Species factsheet Hirundo concolor". BirdLife International. Retrieved 4 April 2010
  2. "பாறை தகைவிலான்Dusky_crag_martin". பார்த்த நாள் 1 நவம்பர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:103
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்