ஆர்க்கிட் தேனீ அல்லது யூகுளோசைன் (Euglossine bees) என்பது தேனீக்களின் குடும்பத்தின் ஓர் உள்குடும்பம் (tribus). இத் தேனீக்கள் பெரும்பாலும் கூட்டமாக இல்லாமல் தனியாக தேனீ சேர்க்கும் பழக்கம் கொண்ட ஓரினம். ஆனால் இவற்றுள்ளும் சில சிறு கூட்டமாக இயங்குவன[1] இக்குடும்பத்தில் ஐந்து பேரினங்கள் உள்ளன, அவற்றுள் 200 இனங்கள் உள்ளன. இவ்வைந்து பேரினங்கள், யூகுளோசா (Euglossa), யூலீமா (Eulaema), யூஃவிரீசீ (Eufriesea), எக்ஃசேரீட் (Exaerete), ஒற்றை உள்ளினம் கொண்ட ஆகுலீ (Aglae) ஆகும். இவை யாவும் தென் அமெரிக்கா, மற்றும் நடு அமெரிக்காவில் காணப்படுகின்றன. ஆனால் யூகுளோசா விரிடிசிமா (Euglossa viridissima) என்னும் இனம் ஐக்கிய அமெரிக்காவிலும் காணப்படுகின்றது. யூலீமா என்னும் பேரினத்தைத் தவிர மற்றவை மாழை போல பளபளப்பான நிறங்கள் கொண்டுள்ளன. இவை பெரும்பாலும் பளபளப்பான பச்சை, தங்க அல்லது நீல நிறங்களில் இருக்கும். மேற்குறிப்பிட்ட ஐந்து பேரினங்களில் கடைசி இரண்டும் மாற்று இனத் அடைகளில் வாழ்கின்றன.
ஆர்க்கிட் தேனீ அல்லது யூகுளோசைன் (Euglossine bees) என்பது தேனீக்களின் குடும்பத்தின் ஓர் உள்குடும்பம் (tribus). இத் தேனீக்கள் பெரும்பாலும் கூட்டமாக இல்லாமல் தனியாக தேனீ சேர்க்கும் பழக்கம் கொண்ட ஓரினம். ஆனால் இவற்றுள்ளும் சில சிறு கூட்டமாக இயங்குவன இக்குடும்பத்தில் ஐந்து பேரினங்கள் உள்ளன, அவற்றுள் 200 இனங்கள் உள்ளன. இவ்வைந்து பேரினங்கள், யூகுளோசா (Euglossa), யூலீமா (Eulaema), யூஃவிரீசீ (Eufriesea), எக்ஃசேரீட் (Exaerete), ஒற்றை உள்ளினம் கொண்ட ஆகுலீ (Aglae) ஆகும். இவை யாவும் தென் அமெரிக்கா, மற்றும் நடு அமெரிக்காவில் காணப்படுகின்றன. ஆனால் யூகுளோசா விரிடிசிமா (Euglossa viridissima) என்னும் இனம் ஐக்கிய அமெரிக்காவிலும் காணப்படுகின்றது. யூலீமா என்னும் பேரினத்தைத் தவிர மற்றவை மாழை போல பளபளப்பான நிறங்கள் கொண்டுள்ளன. இவை பெரும்பாலும் பளபளப்பான பச்சை, தங்க அல்லது நீல நிறங்களில் இருக்கும். மேற்குறிப்பிட்ட ஐந்து பேரினங்களில் கடைசி இரண்டும் மாற்று இனத் அடைகளில் வாழ்கின்றன.