வண்ணந்தீட்டிய ஆமை (உயிரியல்:Chrysemys picta, ஆங்கிலம்:Painted turtle) என்பது, வட அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் நீர்வாழ் ஆமை வகையைச் சார்ந்த உயிரனம் ஆகும். எனவே, இது மெதுவாக நகரும் நன்னீர் ஓட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை வட அமெரிக்காவில், தெற்குக் கனடா தொடங்கி லூசியானா வரையும், வட மெக்சிகோவிலும், பசிபிக் பெருங்கடலிலும், அட்லாண்டிக் கடலிலும் பரவலாக வாழ்கின்றன. இவை செரிசெமைசு (Chrysemys) என்ற பேரினத்தின் ஒரேயொரு வாழ்நிலை இனமாகும். குள நீராமைக் (Emydidae) குடும்பத்தின் சிறு பகுதியாக, இப்பேரினம் விளங்குகிறது. தொல்லுயிர்ப் புதை படிவுகளின் படி, இந்த உயிரினம் ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்னமே வாழ்ந்ததாகக் கண்டறிந்துள்ளனர். கடைசி பனியக் காலத்தில் (Last glacial period), இந்த இனத்தின், நால்வகைச் சிற்றினங்கள், வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு, மேற்கு, தெற்கு, நடு பகுதிகளில் தோன்றியதாக, உயிரியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வண்ணந்தீட்டிய ஆமையின் ஓடு 10–25 cm (4–10 in) நீளமானது, நீள்வளையமானது, வழு வழுப்பான சிறு வரிப்பள்ளம், அவற்றை பெரிய செதில்கள், தட்டு போன்று, ஒன்று மற்றதன் மீது படிந்து காணப்படுகின்றன. அத்தோடு அடிப்புறமானது தட்டையாக அமைந்துள்ளது.[6] [7][8] பாதுகாப்பாக உள்ள ஓட்டின் மேற்புறமானது (carapace), அது வாழும் நீர்நிலையின் அடியாழம் கருப்பு நிறமாக இருந்தால், மேற்புற ஓடும் கருமையாக இருக்கும். சில நேரங்களில் வேறுபட்டு ஆலிவ்(olive) நிறமாக இருக்கும். ஆமையோட்டின் அடிப்புறப் பகுதியானது (plastron) ஓடாகவும், குஞ்சுகளுக்கு செந்நிறமாகவும், பெரிய ஆமைக்கு மஞ்சள் நிறத்துடனும், சில நேரங்களில் சிவப்பு நிறத்துடனும், அத்துடன் அடி ஓட்டின் நடுவில், கருமையான குறியீடுகளும் பெற்று விளங்குகிறது. இவ்வாறாக மேலோட்டிற்கும், கீழோட்டிற்கும் இடையே, கடினமான தோல் போன்ற சவ்வு உண்டு. அது இரண்டு ஓட்டினையும் தனித்தனியே செயற்பட வைக்கும் இயல்புடையதாக உள்ளன. இருப்பினும், இரு ஓட்டினையும், முழுமையாக வெளியே தள்ள இயலாது. இந்த நடு இணைப்பு வசதியானது, ஆபத்துக் காலங்களில், ஆமையின் கால்களும், நலையும், வாலும் உள் இழுத்துக் கொள்ளும் போது, விரிந்து அந்த உள்வரும் உடல் உறுப்புகள் வசதியாக உள்ளிருக்க மிகவும் உறுதுணயாக செயற்படுகிறது.
ஆமையின் தோலானது, ஆமையோடு போலவே கருப்பாகவும், கழுத்துப் பகுதிகளில் சிவப்பும், மஞ்சளுமான வரிக்கோடுகளையும் அமைந்து உள்ளன.கழுத்துப்போலவே, வாலும், கால்களும் நிறம் உடையதாக அமைந்து உள்ளன.[9][10] பிற குள ஆமைகளைப் போலவே, எடுத்துக்காட்டக, பாக் ஆமையைப் போலவே((bog turtle – Glyptemys muhlenbergii), இந்த ஆமையின் கால் விரல்களுக்கு இடையே சவ்வுகள் அமைந்துள்ளன. அச்சவ்வுகள் அவை நீந்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. [11][12][13]
இந்த ஆமையின் தலையானது, தனித்துவமும் மிக்கதாகும். அதன் முகத்தில் மட்டுமே, மஞ்சள் நிற வரிகளும், பெரிய மஞ்சள் புள்ளியும், இழை வரிபோன்ற பழுப்புக் கண்களும், பக்கத்திற்கு ஒன்றாக அமைந்து, அதனை அடுத்தக் கன்னங்களில் இரு அகலான மஞ்சள் கோடுகளும், அவை சந்திக்கும் இடத்தில் தாடையும் அமைந்து, அழகுற உள்ளன.[6][8][9] வண்ண ஆமையின் மேற்புற தாடையானது (philtrum), ஆங்கில எழுத்து "V" தலை கீழ் இருப்பது போன்று அமைந்துள்ளது. கீழ்புறமானது, பற்களைப் போன்ற துருத்திக் கொண்டுள்ள, தசைகளோடு காணப்படுகின்றன.[14]
கொசுக்களுடனான நிகழ்படம்