தமிழில் :சக்களத்திக் குயில்
ஆங்கிலப்பெயர் :Indian Flaintive cuckoo
அறிவியல் பெயர் :Cacomantis passerinus [2]
23 செ.மீ. - மெலிந்த இதன் உடல் கரும்சாம்பல் நிறமும் பழுப்புமாக இருக்க, தொண்டையும் மார்பும் சாம்பல் நிறமாகவும், வயிறு, வெளிர் சாம்பல் நிறமாகவும் இருக்கும். கருப்புவாலின் முனை வெள்ளை வாலின் ஓர இறகுகள் வெள்ளைப்பட்டைகள் கொண்டவை.
தனித்து உயர்மரக்கிளைகளில் கம்பளிப்பூச்சி முதலியவற்றை இரை தேடும் இதனை மரங்களடர்ந்த காட்டுப் பகுதிகளில் முன்னதைவிடப் பரவலாகக் காணலாம். குளிர் காலத்தில் மௌனமாக இருக்கும். இதன் இருப்பு விவரங்கள் சரியாக கணிக்கப்படாததாகவே உள்ளது. [3]
இனப்பெருக்கத்தில் பீபிப்பீ பீ எனவும் பீ பிப்பீ பிப்பீ என மெல்லத் தொடங்கி ஸ்ருதியைக் கூட்டியபடி தொடர்ந்து பாடும். நிலவு வெளிச்சம் இல்லாத இரவிலும் இதன் குரலைக்கேட்கலாம். தோற்றத்தில் குயில் கீச்சானை.ஒத்ததால் பிரித்து அறிவது கடினம். தையல்சிட்டு, தேன்சிட்டு, கதிர்க்குருவி போன்ற சிறு பறவைகளின் கூட்டில் ஜீன் முதல் செப்டம்பர் முடிய முட்டை இட்டுச் செல்லும்.
with caterpillar in beak, in Andhra Pradesh, இந்தியா.