செம்மார்புக் குக்குறுவான் அல்லது கன்னான் அல்லது திட்டுவான் குருவி [2] (coppersmith barbet ) என்பது ஒருவகை குக்குறுவான் பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
இப்பறவை கனத்த அலகுடனும், இலைப் பச்சை நிறத்துடனும், சிவந்த மார்பு, முன்தலைக் கொண்டும், மஞ்சள் கழுத்துடன், குட்டையான வாலுடன் இருக்கும். இப்பறவை ஆல், அரசு, அத்தி மரப் பழங்களை விரும்பி உண்ணும். ஈசல் போன்ற பூச்சிகளையும் உண்ணும்.
இப்பறவை வாழும் பகுதிக்கு ஏதாவது தீங்கு வந்தால் விநோத ஒலி எழுப்பும் தன்மை கொண்டது. இதனாலேயே பளியர் என்ற பழங்குடி மக்கள் இப்பறவையை திட்டுவான் குருவி என்று அழைப்பார்கள். [3]
செம்மார்புக் குக்குறுவான் அல்லது கன்னான் அல்லது திட்டுவான் குருவி (coppersmith barbet ) என்பது ஒருவகை குக்குறுவான் பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.