dcsimg

கருஞ்சொண்டுக் கூரலகி ( Tamil )

provided by wikipedia emerging languages

கருஞ்சொண்டுக் கூரலகி (Drepanornis albertisi) என்பது நடுத்தர அளவான, அதாவது 35 செமீ நீளமான கபில நிறச் சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் ஆண் பறவை தன் கண்களுக்கு அருகில் செவ்வூதா மற்றும் சாம்பல் நிறங் கலந்த தோலைக் கொண்டிருக்கும். இதன் வால் வெளிர் மஞ்சள் நிறமாயும் கண்கள் கடும் கபில நிறமாயும் வாய் மஞ்சள் நிறமாயும் சொண்டு கருமையாகவும் கூர்மையாக நீண்டு வளைந்தும் காணப்படும். இதன் தலையில் கொம்புகள் போன்று மேலெழுந்த கரிய இறகுகள் காணப்படும். நீண்டிருக்கும் மேற்படி இறகுகளின் முனை ஊதா நிறமாக இருக்கும். இப்பறவைகளின் பெண் பறவைகளிடத்தில் மேற்படி கொம்புகள் போன்ற அமைப்புக் காணப்படுவதில்லை. பெண் பறவைகள் ஆண் பறவைகளிலும் ஒப்பீட்டளவிற் சிறியவையும் சொண்டுகள் ஒப்பீட்டளவில் மிக நீளமானவையாகவும் ஆண் பறவைகளின் சொண்டுகளை விட நிறம் குறைந்தும் காணப்படும்.

கருஞ்சொண்டுக் கூரலகிப் பறவையினம் நியூகினித் தீவின் மலைசார் காடுகளெங்கும் பரவிக் காணப்படும். இதன் முதன்மையான உணவுகள் பழங்களும் பூச்சிகளுமாகும். இனப்பெருக்க காலத்தின் போது, இதன் பெண் பறவை ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை இடும். முட்டைகள் வெளிறிய பழுப்பு நிறமாகவும் மேற்பகுதியில் கபில நிறத்திலும் சாம்பல் நிறத்திலுமான புள்ளிகள் கொண்டும் இருக்கும்.

மேற்கோள்கள்

  • BirdLife International (2004). Epimachus albertisi. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 29 October 2006. இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.

வெளித் தொடுப்புகள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கருஞ்சொண்டுக் கூரலகி: Brief Summary ( Tamil )