dcsimg

பூனைக் குடும்பம் ( Tamil )

provided by wikipedia emerging languages

பூனைக் குடும்பம் என்பது புலி, பூனை, சிங்கம், வேங்கை, மலையரிமா, காட்டுப் பூனை உள்ளிட்ட சுமார் 37 பூனை வகைகளைக் கொண்ட ஒரு விலங்குக் குடும்பம் ஆகும். உயிரியலில் இப்பிரிவை Felidae என்று அழைப்பர். பூனைக் குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு புலியாகும்.[2].

பண்புகள்

பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் ஊனுண்ணிகள் ஆகும். சிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து இனங்களும் தனித்தே வாழ்கின்றன. இவை நன்கு கூர்மையான இரவு நேரப் பார்வைத்திறன் கொண்டவை. தனது வல்லுகிர்களை (வன்மையான நகங்களை) இவற்றால் தேவையான போது உள்ளிழுத்துக் கொள்ள இயலும்.

மேற்கோள்கள்

  1. McKenna, Malcolm C.; Susan K. Bell (2000-02-15). Classification of Mammals. Columbia University Press. பக். 631. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0231110136.
  2. பக்கம் 159, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என்.ஸ்ரீநிவாஸன், திசம்பர் 1999, வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை-17
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பூனைக் குடும்பம்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பூனைக் குடும்பம் என்பது புலி, பூனை, சிங்கம், வேங்கை, மலையரிமா, காட்டுப் பூனை உள்ளிட்ட சுமார் 37 பூனை வகைகளைக் கொண்ட ஒரு விலங்குக் குடும்பம் ஆகும். உயிரியலில் இப்பிரிவை Felidae என்று அழைப்பர். பூனைக் குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு புலியாகும்..

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்