dcsimg

அசோலா ( Tamil )

provided by wikipedia emerging languages

அசோலா (Azolla) எனபடுப்பவை தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுகிறது.

அமைப்பு

மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது.மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும்.இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை.பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.

சத்துக்கள்

இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளன. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் 7 முதல் 10 விழுக்காடு வரையும் , தாது உப்புகள் 10 முதல் 15 விழுக்காடு வரையும் , வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிக்கும்.

பயன்கள்

  • அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.
  • அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது.
  • நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.
  • அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம்.[2]

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அசோலா: Brief Summary ( Tamil )